புதன், 1 மே, 2013

அரசடித்தீவு விக்னேஸ்வரா அறநெறிப் பாடசாலையால் எண்ணச்சிந்து பாடப்பட்டது

(Rusha)அறநெறிப் பாடசாலையானது மாணவர்களை இழிவழி போகாது நல் வழி பாதையில் இட்டுச்செல்லும் நீதிக்கருத்துக்களையும், அறக்கருத்துக்களையும் இந்துக்களின் கலை, கலாசார நிகழ்வுகளின் ஊடாக மாணவர்களுக்கு புகட்டி எதிர்கால தலைவர்களை உருவாக்கும் நிறுவனமே
அறநெறிப் பாடசாலையாகும். அரசடித்தீவு விக்னேஸ்வரா அறநெறிப் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களால் 27.04.2013 காலை 8.30 மணிதொடக்கம் ஆண்டுதோறும் பாடப்படும் எண்ணைச்சிந்து  பாடப்பட்டது.  இவ் எண்ணைச்சிந்தானது நான்கு குழுக்களாக 11.30 மணிவரை பாடப்பட்டு முடிவடைந்தது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட நிதியானது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காகவும் மற்றும் ஆண்டுதோறும் மாரியம்மன் உற்ஷவ நிகழ்விற்காகவும் (அறநெறிப் பாடசாலை, இந்து சமய வளர்ச்சி மன்றத்தால் ) பயன்படுத்தப்படுகின்றது. அத்தோடு ஆண்டுதோறும் நாடாத்தப்படும் பரீட்சை தபால் செலவுகள், அறநெறிபாடசாலையினால் நடாத்தப்படும் கலை, கலாசார நிகழ்விற்கு இவ்நிதி பயன்படுத்தப்படுகிறது. என்பதனை அறநெறிபாடசாலை அதிபர் தெரியப்படுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக