வெள்ளி, 28 ஜூன், 2013

மட்/மாவடிமுன்மாரி அ.த.க.பாடசாலையில் ஆங்கில அறிவினை விருத்தி செய்யும் நோக்கில் நடைபெற்ற நிகழ்வு

2013.06.28 ஆம் திகதி இன்று மட்/மாவடிமுன்மாரி அ.த.க.பாடசாலையில் ஆங்கில இலக்கிய மன்றத்தின் (English  Literacy Association) நிகழ்வுகள் நன்பகல் 12.15 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் பாடசாலையின் பிரதி அதிபர் திரு.செ.முருகுப்பிள்ளை அவர்களின் தலைமையின் 
கீழ் நடைபெற்றது.
       
                     நவீன யுகத்தில் ஆங்கில மொழி விருத்தியின் அவசியத்திற்கு ஏற்ப மாணவர்களை வளர்த்தெடுக்கும் நோக்கில் பாடசாலைகளில் ஆங்கில இலக்கிய மன்றங்கள் உருவாக்கப்பட்டு அதனூடாக மாணவர்களின் ஆங்கில அறிவினை (English knowledge) விருத்தி செய்ய கல்வி திணைக்களங்களினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய நாளில் மாணவர்களினால் ஆங்கில மொழியில் நாடகங்கள், பாடல்கள், கவிதைகள், பேச்சுக்கள் எனப் பல நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பிரதி அதிபர்  உரையாற்றுகையில்; எமது பாடசாலையில் மிகப்பெரிய விடயத்தினை ஆங்கிலப்பாட ஆசிரியர்கள் நிகழ்த்திக்காட்டியுள்ளனர். மாணவர்கள் எவ்வித தயக்கமும் இன்றி இயல்பாகவே ஆங்கில மொழியில் தமது நிகழ்வுகளை செய்திருப்பது சிறப்பானதாகும். இதே போன்று ஏனைய மாணவர்களும்  எதிர்வரும் காலங்களில் ஆங்கில மொழியை நன்கு பயின்று எதிர்கால சவால்களை வெற்றி கொள்ள தயாராக வேண்டும் எனக் கூறனார். இதற்காக மாணவர்களை வழிப்படுத்திய  ஆசிரியர்களான திரு.எஸ்.குகேந்திரன், செல்வி.என்.சுபாஜினி ஆகிய இருவருக்கும் எமது பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டதோடு நிகழ்வில் பங்கு பற்றிய மாணவர்களையும் பாராட்டினார். தொடர்ந்து 1.30 மணியளவில் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக