செவ்வாய், 2 ஜூலை, 2013

குடும்பநல மேன்பாட்டுக் கருத்தரங்கு

தேன்யோகி
அரசடித்தீவு பாலர் பாடசாலையில் இடம்பெற்ற குடும்ப நலமேம்பாட்டுக் கருத்தரங்கானது கடந்த 27.06.2013 திகதி அன்று வைத்திய அதிகாரி S.ஜெயராஜ் அவர்களின் தலைமையில் வேள்ட்விஷன் லங்கா அனுசரனையுடன் நடைபெற்றது. இதில் குடும்பத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முகமாக
பல கருத்துக்கள் பகிரப்பட்டன. இதில் அரசடித்தீவு கிராமத்தைச் சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் கலந்துகொண்டனர். இதில் திருமணமாகியவர்களும் திருமணமாகா தவர்களும் தங்களுடைய குடும்பத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளைக்கூறி அப்பிரச்சனைகளுக்கு தாங்கள் எவ்வாறு முகம்கொடுத்து அதை எவ்வாறு சுமூகமாக தீர்ப்பது பற்றியும் அவர்கள் இக் கலந்துரையாடலில் பகிர்ந்துகொண்டனர்.
   
  வைத்திய அதிகாரி ளு.ஜெயராஜ் அவர்கள் இன்றைய இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றியும் அதற்கு எவ்வாறு திட்டமிட்டு தீர்வு காண்பது பற்றியும் மிகவும் தெளிவான முறையில் கருத்துக்களை கூறினார்.  இவ் கலந்துரையாடலின்போது குளிர்பானம், சிற்றுண்டி என்பன வழங்கப்பட்டு கருத்தரங்கானது மாலை 5.15 நிறைவுபெற்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக