புதன், 17 ஜூலை, 2013

பண்டாரியாவெளி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த மஹோற்சவம் - 2013 (நாககட்டு)

-இதழினி- கிழக்கிங்கையின் மிகப்பிரசித்தி பெற்றதும், மட்டு மாநகருக்குத் தெற்குத் திசையில், மண்முனை வாவிக்கு அப்பால் பண்டாரியாவெளி எனும் தொன்மை வாய்ந்த அழகிய கிராமத்தின் மத்தியில் எழுந் தருளியுள்ளதும், சைவமக்களால் நீண்ட காலமாகப் பக்தி சிரத்தையோடு பேணி வளர்த்து வருவதுமாகிய
 ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த மஹோற்சவம் நிகழும் விஜய வருடம் ஆனித்திங்கள் 28ம் நாள் (12-07-2013) வெள்ளிக்கிழமை பின்னிரவு 4.00 மணியளவில் வரும் மகநட்சத்திரமும் சதுர்த்தி திதியும் கூடிய சுபவேளையில் திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆனித்திங்கள் 29ம் நாள் (13-07-2013) சனிக்கிழமை பின்னிரவு உத்தர சுபவேளையில், பால், பழம் வைத்தல் நிகழ்வுடன், ஆடித்திங்கள் 03ம் நாள் (19-07-2013) வெள்ளிக்கிழமை மாபெரும் தேசத்துப்பொங்கலுடனும், அன்றிரவு பொதுத் திருவிழாவும், பால், பழம், வைத்தல் நிகழ்வுடனும் உற்சவம் இனிது நிறைவுபெறும்.


தந்துதவு சங்கரனும்
சாம்பவியும் வாழி
தக்க புகழ் பெரியோர்கள்
புலவோர்கள் வாழி
வந்துதவு சரசோதி
மாலயன் வாழி
மாதா பிதாக்ளொடு
மக்கள் மனை வாழி
சிந்தினொடு பொந்திலுறை
கட்செவிகள் வாழி
சீரிலுயர் காராளர்
மேளியும் வாழி
புந்தி மகழ்வோடு
பண்டாரியாவெளியிலுறை
புதுமை செறி நாகம்மை
அருள் பெற்று வாழ வாழியவே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக