வெள்ளி, 19 ஜூலை, 2013

UTCDA நிறுவன வளாகத்தினுள் ஜிம் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

-இதழினி- இன்று (2013.07.18) UTCDA நிறுவன வளாக த்தினுள் ஜிம் நிலையம் (Gym center ஒன்றினை அமைப்ப தற்கான அடிக்கல் நாட்டு விழா  இடம்பெற்றது. பிரதேச இளைஞர்களின் உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் வேள்ட் விஷன் லங்கா, பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தி திட்டத்தின்
கீழ்  UTCDA  நிறுவனத்தினால் முனைக்காட்டில் அமைந்துள்ள தனது வளாகத்தில் ஜிம் நிலையம் ஒன்றினை செயற்படுத்தும் நோக்கில் அமைக்கப்படவுள்ள கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று பி.ப 1.30 மணிக்கு அமைப்பின் செயலாளர் திரு.சி.கங்காதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்கள் பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதியாக வேள்ட் விஷன் லங்கா, பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தி திட்ட முகாமையாளர் திரு.ஜீ.ஜே.அனுராஜ் அவர்களும் கலந்து கொண்டதோடு திட்ட இணைப்பாளர் திரு.அமுதராஜ் மற்றும்   UTCDA நிறுவனத்தின் உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக