சனி, 20 ஜூலை, 2013

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் அரடித்தீவு கிராம மக்களின் திருவிழா

-வித்தகன்- தாந்தாமலை அருள் மிகு ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவமானது 03-07-2013ம் திகதி புதன்கிழமை கொடியோற்றத்துடன் ஆரம்பமானது. இவ் ஆலயத்திலே கிராமங்களின் திருவிழாவானது 03.07.2013 தொடக்கம் 19.07.2013 வரை உற்சவ காலங்களில் இரவு நேரங்களில் சிறப்பான முறையில் இடம் பெற்று
வருகின்றது. அதிலே 18 நாள் பூசையை சிறப்பிக்கும் முகமாக 19.07.2013ந் திகதி அதாவது நேற்று வெள்ளிக்கிழமை அன்று அரசடித்தீவு கிராம மக்களின் திருவிழாவானது மேள தாள வாத்திங்களுடன் வெகு சிறப்பான முறையில்  இடம் பெற்றது. இங்கு மக்கள் மோட்டார் வாகனங்களிலும் உழவு இயந்திரங்கள் மூலமும் ஆலயத்தை வந்தடைந்து ஆலயத்தில் பொதுப் பணி வேளைகளில் இடுபட்டனர். தொடர்ந்து திருவிழாவினை சிறப்பிக்கும் முகமாக அபிடேக பூசை, ஸ்ணகும்ப பூசை, கொடிக்கம்ப பூசை, வசந்தமண்டப பூசை  போன்ற  கிரிகைகள இடம் பெற்று தொடர்ந்து ஓவ்வொரு தெய்வங்களுக்கும் பூசை ஆராதனை இடம் பெற்று ஓவ்வொரு வாகனத்துக்குமான தெய்வங்கள் அதிலே வைக்கப்பட்டு மூசிக வாகனத்திலே விக்கினங்கள் தீர்க்கும் வேழ முகத்தோன் விநாயகன் எழுந்தருள எருது வாகனத்திலே பார்வதி பரமேஸ்வரர் எழுந்தருள ஆலயத்தின் பிரதான மூர்த்தியான தாந்தாமலை கந்தன் வள்ளி தெய்வானை சகிதம் மயில் வாகனத்திலே எழுந்தருள  திருவிழாவானது ஆலயத்தை சுற்றி வீதி வலம் வந்து இறுதியாக மலை உச்சியிலே அமைந்துள்ள  மலைப் பிள்ளையார் ஆலயத்துக்கு சென்று அங்கு பூசை ஆராதணைகள் இடம் பெற்று அரசடித்தீவு கிராம மக்களின் திருவிழா இனிதே நிறைவுபெற்றது.
       இதன்போது கூட்டு வழிபாடுகளும், அடியார்களின் நேர்த்தித் கடன்களும், அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக