ஞாயிறு, 21 ஜூலை, 2013

தாந்தாமலை ஸ்ரீ முருகன் அன்னதான சபையின் ஆரம்ப நிகழ்வு - 2013

-ஜெய்- ‘எப்பணி செய்தாலும் அடியார்களின் பசியை தீர்க்கின்ற அன்னதானப்பணியை விட சிறப்பான பணி எதுவுமில்லை’ என்று கூறிய  இளையான் குடிமாற நாயனாயனாரின் கூற்றுக்கு இணங்க மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு தாந்தாமலை ஸ்ரீ முருகன் அன்னதான சபையின்
ஆரம்ப நிகழ்வானது இன்று 21-07-2013 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.01 மணியளவில் ஆரம்பமானது. இந் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றல் தொடர்ந்து இறைபாராயணம்  இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரை, ஆசியுரை போன்ற நிகழ்வுகள்  இடம்பெற்றன. இந் நிகழ்வில்  சர்வபோதகம் சிவாஷாரி கதாவாரி முத்தமிழரசி சிவயோகச்செல்வன் த.சாம்பசிவம் சிவாச்சாரியார; அவர்களும் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய நிருவாகிகள் மற்றும் அன்னதான சபையின் நிருவாகத்தினர், உறுப்பினர்கள் தாந்தாமலை பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
      
          மேலும் நிகழ்வில் தாந்தாமலை ஸ்ரீ முருகன்  அன்னதான சபையின் ஆரம்பகால  தலைவர் திரு.வே.தம்பிராசா அவர்களின் புதல்வாரன அமரர் தம்பிராசா வாகீசன் அவர்களின் ஈராண்டு ஞாபகார்த்தமாக இன்றைய அன்னதான ஆரம்பப் பணிக்கு அனுசரணை வழங்கியுள்ளனர்.  இவ் அன்னதானப் பணியானது அடியார்களின் நலன் கருதி வழமை போன்று ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த உற்சவ இறுதி மூன்று தினங்களும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக