திங்கள், 22 ஜூலை, 2013

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் திருவிழாக் காலம்

-சகி -புண்ணிய பூமியென்று திருமூலரால் அழை க்கப்பட்ட இலங்கை தேசத்தின் மீன்பாடும் பூமியாம் மட்டுமாநகரில் தேரோடும் ஈசனைத் தாண்டிய மண்முனை தென்மேற்கு பகுதியில் மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலப் பிரதேசத்தில் மலைக்குன்றில் அமைந்துள்ள மாபெரும் ஆலயமே தாந்தாமலை ஸ்ரீ முருகன்
ஆலயமாகும். இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவமானது கடந்த 02.07.2013 அன்று செவ்வாய்க்கிழமை கொடி யேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 24.07.2013 புதன்கிழமை தீர்தோற்சவத்துடன் இனிதே நிறைவுபெறவுள்ளது.  தீர்தோற்சவ வைபவம் நெருங்கிக்கோண்டிருக்கும் இவ்வேளை ஆலயத்தை நோக்கி அடியார்களின் எண்ணிக்கை குவிந்து கொண்டிருப்பதையும் ஒவ்வொரு கிராம மக்களும் தத்தமது கிராம திருவிழாக்களை சிறப்பான முறையில் நடாத்திக் கொண்டிருப்பதையும் காணமுடிகின்றது. 

   
             கதிர்காம முருகன் ஆலய உற்சவம் பிற்போடப்பட்டுள்ளதால் தாந்தாமலை ஸ்ரீ  முருகப்பெருமானை தரிக்க வரும் பக்த கூட்டமும் பாதயாத்திரைகளும் நாளுக்கு நாள் அரிகரித்த வண்ணமே உள்ளது. அடியார்கள் ஆடு, மாடு, கோழி என பலவிதமான பொருட்களையும் நேர்த்திக்கடனாக செலுத்துவதனையும் அதன் மூலம் தமது வேண்டுதல்களையும் நிறைவேற்றிய வண்ணம் உள்ளனர். திருவிழாக்காலங்களில் பக்தர்களின் நலன் கருதி பட்டிருப்பு, மண்முனை, அம்பிளாந்துறை, வவுணதீவு போன்ற இடங்களினூடாக போக்குவரத்து சேவைகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதால் பக்த அடியார்களின் போக்குவரத்தும் இலகுபடுத்தப்பட்டுள்ளமையை காணமுடிகின்றது. ஆலயத்தை அண்மித்த வெளி வீதிகளில் அடியார்களின் நலன் கருதி வியாபார நிலையங்கள் குவிந்து காணப்படுகின்றன. 

             மேலும் ஆலயத்தை வந்தடையும் பக்தர்களின் பசிதீர்க்கும் வண்ணம் சிறப்பான முறையில் அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றமை ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக